வர்த்தகம்

கடன் பத்திரங்கள் மூலம் ரூ.55,000 கோடி நிதி திரட்ட எல்ஐசி ஹவுசிங் முடிவு

DIN

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுக்காக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.55,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்திருப்பதாக அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான வினய் ஷா கூறினார்.
இது குறித்து அவர் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: எல்ஐசி எச்எஃப்எல் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.55,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் வரை ரூ.17,000 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக கடன் வழங்கும் பிரிவில் 15 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளது. பெரும் குடியிருப்புகள் கட்டுவதற்காக கடன் பெறும் மனை வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் வீடுகளுக்காக கடன் பெறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம் தற்போதுதான் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து அறிய சிறிது காலாம் காத்திருக்க வேண்டும் என்றார் அவர்.
"உங்கள் இல்லம்' கண்காட்சி:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எல்ஐசி எச்எஃப்எல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "உங்கள் இல்லம்' பிரத்யேக வீட்டுக் கடன் கண்காட்சியை வினய் ஷா தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். இதில் 75-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (செப்.18) வரை நடைபெற உள்ளது.
பொதுமக்களுக்கு வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுதவற்கான கடனுதவி, ஆலோசனைகள், நிதித் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்க 80-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த பட்ஜெட் , அதிக பட்ஜெட் என பொருளாதார வசதிக்கேற்ப 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதிக்கான வட்டி விகிதம் 8.35 சதவீதம் முதல் தொடங்கும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT