வர்த்தகம்

ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள்: வர்த்தக அமைச்சர்

DIN

ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. பொருள்களின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் புதிய சந்தைகளை கண்டறிந்து அங்கு ஏற்றுமதியை மேற்கொள்வது உள்ளிட்ட பல செயல்திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அதிக அளவில் வர்த்தக வாய்ப்புகள் உள்ள ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, இம்மாத இறுதியில் ஆப்பிரிக்கா சென்று அங்குள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து 12 நாடுகளின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசவுள்ளோம்.
மேலும் அமெரிக்கா உடனான வர்த்தக பிரச்னைகளை கண்டறிந்து தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு சென்ற மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சரிவைக் கண்டது. இருப்பினும், 2017-18 முழு நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 9.78 சதவீதம் அதிகரித்து 30,284 கோடி டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT