வர்த்தகம்

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.6,904 கோடியாக உயர்வு

DIN

டாடா குழுமத்தைச் சேர்ந்த நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நான்காவது காலாண்டில் ரூ.6,904 கோடி லாபம் ஈட்டியது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு வியாழக்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் ரூ.32,075 கோடியாக இருந்தது. 2016-17 நிதி ஆண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.29,642 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 8.2 சதவீதம் அதிகம்.
நிகர லாபம் ரூ.6,608 கோடியிலிருந்து 4.4 சதவீதம் அதிகரித்து ரூ,.6,904 கோடியானது. 
கடந்த 2017-18 முழு நிதி ஆண்டில் வருவாய் 4.2 சதவீதம் உயர்ந்து ரூ.1.23 லட்சம் கோடியாக இருந்தது. அதேசமயம், நிகர லாபம் 1.7 சதவீதம் குறைந்து ரூ25,826 கோடியானது. 
மார்ச் மாத இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 3,94,998-ஆக இருந்தது. சென்ற நிதி ஆண்டுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT