வர்த்தகம்

சர்க்கரை ஏற்றுமதிக்கான காலக்கெடு நீட்டிப்பு

தினமணி

மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதிக்கான காலக்கெடுவை டிசம்பர் வரையில் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 நிர்ணயிக்கப்பட்ட சர்க்கரை ஏற்றுமதி இலக்கில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே இதுவரையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஆலைகள் 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யும் வகையில் அதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவி க்கப்பட்டுள்ளது.
 சர்க்கரை ஏற்றுமதிக்கான காலக்கெடு வரும் செப்டம்பருடன் முடிவடையவிருந்த நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு புள்ளிவிவரங்களின்படி, இதுவரையில் 5 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT