வர்த்தகம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2%-ஆக குறையும்: ஃபிட்ச்

DIN


நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7.2 சதவீதமாக தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் குறைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கடன் பெறுவதற்கான செலவினம் அதிகரித்துள்ளது. மேலும், கடன் பெறும் வாய்ப்புகளும் மிகவும் குறைந்து போயுள்ளன.
இதனால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 7.2 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நிறுவனம் செப்டம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிட்ட மதிப்பீடுகளான 7.8 சதவீதம் மற்றும் 7.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.
அடுத்த 2019-20-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவும், 2020-21-இல் 7.1 சதவீதமாகவும் இருக்கும் என்று ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கணித்துள்ளது. இந்த நிலையில், ஃபிட்ச் நிறுவனம் தற்போதுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதைவிடக் குறைவாகவே மதிப்பீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT