வர்த்தகம்

ஜிஎஸ்டி ஆண்டுக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

DIN

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டுக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு அடுத்தாண்டு மார்ச் 31 வரையில் நீடித்துள்ளது.
 ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தங்களது விற்பனை, கொள்முதல் குறித்த முழு விவரங்களையும், தாங்கள் பெற்ற உள்ளீட்டு வரி பலன்களையும் ஆண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் 2017-18 ஆண்டுக்கான விவரங்களை தாக்கல் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான கடைசி தேதி நடப்பாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நிதி அமைச்சகம் நீடித்துள்ளது.
 நேரடி வரிகள் வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வர்த்தகர்கள் ஜிஎஸ்டிஆர்-9, ஜிஎஸ்டிஆர்-9ஏ மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 2019 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான படிவங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி-யின் பொது வலைதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT