வர்த்தகம்

காப்பீட்டு நிறுவனங்களுக்கான மூலதன விதிமுறை மாற்றம்?

DIN

காப்பீட்டு நிறுவனங்களின் மூலதன தேவை விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் உறுப்பினர் நிலேஸ் ஷதி வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களுக்கான மூலதன தேவை தற்போது ரூ.100 கோடியாக உள்ளது. பல முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகமானதாக காணப்படுகிறது. எனவே, மூலதன தேவை விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் பயனாக, வரும் 2021 அல்லது 2022-ஆம் ஆண்டுக்குள் மூலதன தேவை தொகையில் மாற்றம் ஏற்படும். அப்போது, காப்பீட்டு துறையில் தடம்பதிக்க  விரும்பும் பல நிறுவனங்கள் புதிதாக களமிறங்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT