வர்த்தகம்

விறுவிறுப்படையும் தங்கத்துக்கான தேவை...

DIN

பொருள்களின் விலை அதிகரித்து விட்டதே என பல்வேறு கூக்குரல்கள் கேட்டாலும், பொதுமக்களிடையே தங்கம் வாங்கும் போக்கு மட்டும் எப்போதுமே மட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. அந்தவகையில், அதன் இறக்குமதி மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. 
கிராமப்புறங்களில் தேவை அதிகரித்தது மற்றும் சிறப்பான பொருளாதர வளர்ச்சி ஆகியவையே இந்தியாவில் தங்கம் இறக்குமதி சூடுபிடித்ததற்கு முக்கிய காரணம் என்கிறார் உலகத் தங்க கவுன்சிலின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம். 
கடந்த 2016-ஆம் ஆண்டின் தேவையான 666.1 டன்னுடன் ஒப்பிடும்போது சென்ற ஆண்டில் தங்கத்துக்கான தேவை 9.1 சதவீதம் அதிகரித்து 727 டன்னாகியுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தங்க நாணயங்களுக்கான தேவை இன்னும் மிகச் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்கிறார் அவர். 
மத்திய பட்ஜெட்டில் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தங்கம் பரிமாற்று முனையம் அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய செயல்திட்டங்களை செயல்படுத்த அரசு முனைப்பு காட்டியுள்ளது.
இதுபோன்ற சாதகமான நிகழ்வுகளால், நடப்பு ஆண்டில் தங்கத்துக்கான தேவை 700-800 டன்னாக எகிறும் என்கிறார் சோமசுந்தரம். 
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ள அதேசமயத்தில், உலக அளவில் இதற்கான வரவேற்பு குறைந்து போயுள்ளது. அதன்படி, 2016-இல் 4,362 டன்னாக காணப்பட்ட உலகளாவிய தங்கத்துக்கான தேவை கடந்த ஆண்டில் 7 சதவீதம் குறைந்து 4,071.7 டன்னாகியுள்ளது. 
ஈடிஎஃப் போன்ற தங்க முதலீட்டு திட்டங்களுக்கு போதிய அளவு வரவேற்பு இல்லாமல் போனதே உலகளவில் தங்கத்துக்கான தேவை சரிவடைந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT