வர்த்தகம்

ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகன விற்பனை 43% உயர்வு

DIN

இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை டிசம்பரில் 43 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முஞ்சால் தெரிவித்ததாவது:
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை மேலும் வலுப்படுத்திய ஆண்டாக அது அமைந்தது. சவாலான சூழ்நிலைகளுக்கிடையிலும் சென்ற டிசம்பரில் 4,72,731 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டு விற்பனையான 3,30,202 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 43 சதவீதம் அதிகம்.
கடந்த 2017ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வாகன விற்பனை சாதனை அளவாக 72,07,363 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. 
தற்போது நடப்பு நிதி ஆண்டின் கடைசி காலாண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நிலையில், பிரீமியம் பிரிவு பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனையில் அதிகம் கவனம் செலுத்தவுள்ளோம். இதன் காரணமாக, நிறுவனம் தனது சந்தை பங்களிப்பை சிறப்பான அளவில் தக்கவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT