வர்த்தகம்

பஜாஜ் ஆட்டோ லாபம் 24% அதிகரிப்பு

DIN

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிகர லாபம் முதல் காலாண்டில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிறுவனம் விற்பனையின் மூலமாக ரூ.7,267.19 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.5,740.3 கோடியாக காணப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் மேற்கண்ட இரு வருவாய் புள்ளிவிவரங்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பீடு செய்ய இயலாது.
விற்பனை சூடுபிடித்ததையடுத்து, நிகர லாபம் ரூ.836.74 கோடியிலிருந்து 24.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,041.78 கோடியை எட்டியது என பஜாஜ் ஆட்டோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT