வர்த்தகம்

சர்வதேச நிலவரங்கள் சாதகமின்மையால் சென்செக்ஸ் 261 புள்ளிகள் வீழ்ச்சி

DIN

சர்வதேச நிலவரங்கள் சாதகமற்று காணப்பட்டதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையன்றும் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. 
சீனா முறையற்ற வகையில் வர்த்தக நடைமுறைகளை கடைப்பிடித்தால் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
பொருளாதார பலம் பொருந்திய இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்த வர்த்தக போர் பல நாடுகளின் பங்குச் சந்தைகளில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
வேதாந்தா பங்கின் விலை 3.55 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 2 சதவீதமும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 261 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 35,286 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 89 புள்ளிகள் சரிந்து 10,710 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT