வர்த்தகம்

வட்டி விகிதங்களை உயர்த்தியது எஸ்பிஐ

DIN

பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை 0.20 சதவீதம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எம்சிஎல் ஆர் அடிப்படையில் கணக்கிடப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் தற்போது 7.95 சதவீதமாக உள்ளது. இது தற்போது 0.20 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 8.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட இந்த வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
பல்வேறு வகையிலான முதிர்வு காலத்தைக் கொண்ட சிறிய மற்றும் மொத்தமாக மேற்கொள்ளப்படும் குறித்தகால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.75 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள்ளான முதிர்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.15 சதவீதம் உயர்த்தப்பட்டு 6.40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT