வர்த்தகம்

அக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை நிலவரம்

DIN


பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை அக்டோபரில் சூடுபிடித்தது.
மாருதி சுஸுகி 
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் விற்பனை சென்ற அக்டோபர் மாதத்தில் 1,46,766-ஆக இருந்தது. கடந்தாண்டு இதே மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையான 1,46,446 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்..உள்நாட்டில் விற்பனை 1.5 சதவீதம் உயர்ந்து 1,38,100-ஆகவும், அதேசமயம் ஏற்றுமதி 17 சதவீதம் குறைந்து 8,666-ஆகவும் இருந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசோக் லேலண்ட்
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை அக்டோபரில் 17 சதவீதம் அதிகரித்து 15,149-ஆக இருந்தது. நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 9,797-ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 3,804-லிருந்து 41 சதவீதம் அதிகரித்து 5,352-ஆகவும் இருந்தது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

டிவிஎஸ் மோட்டார்
சென்ற அக்டோபரில் 3,98,427 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி வியாழக்கிழமை தெரிவித்தது. 
கடந்தாண்டு இதே கால அளவில் விற்பனையான 3,84,307 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை 25 சதவீதம் உயர்ந்து 3,38,988-ஆகவும், ஏற்றுமதி 27 சதவீதம் வளர்ச்சி கண்டு 57,926-ஆகவும் இருந்தது என டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸின் அக்டோபர் மாத விற்பனை 57,710-ஆக இருந்தது. கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகம். 
உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 11 சதவீதம் உயர்ந்து 18,290-ஆகவும், வர்த்தக வாகன விற்பனை 22 சதவீதம் அதிகரித்து 39,420-ஆகவும் காணப்பட்டன. ஏற்றுமதி 6 சதவீதம் 
உயர்ந்து 4,554-ஆக இருந்தது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT