வர்த்தகம்

ஃபிளிப்கார்ட் சிஇஓ திடீர் ராஜிநாமா

DIN


ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) பின்னி பன்சால் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
இதுகுறித்து வால்மார்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் சிஇஓ பின்னி பன்சால் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவர் மீது சுமத்தப்பட்ட தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும், அந்த விசராணையில் பின்னி பன்சாலுக்கு எதிரான புகாரை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதையும் கண்டறிய முடியவில்லை.
தவறான நடத்தை குற்றச்சாட்டை பின்னி பன்சாலும் முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், பின்னி பன்சாலின் ராஜிநாமா முடிவை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என வால்மார்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனது சிஇஓ பதவியை ராஜிநாமா செய்துள்ள போதிலும், ஃபிளிப்கார்ட்டின் முக்கிய பங்குதாரராகவும், நிர்வாக குழுவில் உறுப்பினராகவும் தொடர்வேன் என பின்னி பன்சால் அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT