வர்த்தகம்

பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு 18% சரிவு

DIN

நடப்பு ரபி பருவத்தில் பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு 18 சதவீதம் சரிவடைந்துள்ளது. 
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
வறட்சி காரணமாக கர்நாடகம், மஹாராஷ்டிரம் மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பருப்பு சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால், நடப்பு ரபி பருவத்தில் பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு 69.95 லட்சம் ஹெக்டேராகியுள்ளது. கடந்தாண்டுடன் (85.32 லட்சம் ஹெக்டேர்) ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் குறைவு.
ரபி பருவத்தில் முக்கிய பயிராக திகழும் கோதுமை சாகுபடி பரப்பு 54.28 லட்சம் ஹெக்டேரிலிருந்து தற்போது 51.63 லட்சம் ஹெக்டேராகியுள்ளது.
கர்நாடகத்தில் பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு 12.98 லட்சம் ஹெக்டேரிலிருந்து 7.35 லட்சம் ஹெக்டேராக சரிந்துள்ளது. 
அதேபோன்று மஹாராஷ்டிராவில் பருப்பு சாகுபடி பரப்பு 10.61 லட்சம் ஹெக்டேரிலிருந்து 5.62 லட்சம் ஹெக்டேராக சுருங்கியுள்ளது. மத்திய பிரதேசத்திலும் இதன் பரப்பு 30.9 லட்சம் ஹெக்டேரிலிருந்து சற்று குறைந்து 29.23 லட்சம் ஹெக்டேராகியுள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் தொடங்கும் ரபி பருவத்தின் அறுவடைப் பணிகள் மார்ச் மாதத்திலிருந்து நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT