வர்த்தகம்

செப்டம்பர் மாத வாகன விற்பனை நிலவரம்

DIN


பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகியவற்றின் காரணமாக சென்ற செப்டம்பர் மாதத்தில் வாகன விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. பண்டிகை காலம் நெருங்கி வருவதையடுத்து இனி வரும் நாள்களில் வாகன விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகி விற்பனை குறைவு
வாகன சந்தையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகியின் கார் விற்பனை சென்ற செப்டம்பர் மாதத்தில் 1,62,290-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனையான 1,63,071 கார்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவானதாகும்.
அதேசமயம், உள்நாட்டு சந்தையில் விற்பனை 1.4 சதவீதம் உயர்ந்து 1,53,550-ஆக காணப்பட்டது. இருப்பினும், ஏற்றுமதி 25.1 சதவீதம் சரிந்து 8,740-ஆக இருந்தது. 
டாடா மோட்டார்ஸ் விற்பனை 20% உயர்வு
இந்நிறுவனம் சென்ற செப்டம்பரில் 64,520 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்தாண்டின் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையான 53,964 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகம்.
உள்நாட்டு சந்தையில் வாகன விற்பனை 17,286-லிருந்து 7 சதவீதம் உயர்ந்து 18,429-ஆக காணப்பட்டது. ஏற்றுமதி 35 சதவீதம் வளர்ச்சி கண்டு 5,250-ஆக இருந்தது.
அசோக் லேலண்ட் விற்பனை 26% அதிகரிப்பு
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற செப்டம்பரில் 26 சதவீதம் அதிகரித்து 19,373-ஐ தொட்டது. கடந்தாண்டின் இதே மாதத்தில் விற்பனை 15,371-ஆக காணப்பட்டது.
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன விற்பனை 11,805-லிருந்து 21 சதவீதம் உயர்ந்து 14,232-ஆக காணப்பட்டது. இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 44 சதவீதம் அதிகரித்து 5,141-ஆக இருந்தது.
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 18% வளர்ச்சி
சென்ற செப்டம்பரில் டிவிஎஸ் மோட்டார் 4,23,978 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனையுடன்
(3,59,850) ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும்.
இருசக்கர வாகன விற்பனை 17 சதவீதம் அதிகரித்து 4,10,696-ஆக காணப்பட்டது. உள்நாட்டில் விற்பனை 18 சதவீதம் உயர்ந்து 3,61,136-ஆக இருந்தது. ஸ்கூட்டர் விற்பனை 1,21,601 என்ற எண்ணிக்கையிலிருந்து 17 சதவீதம் வளர்ச்சியடைந்து 1,42,562-ஆக காணப்பட்டது. ஏற்றுமதி 20 சதவீதம் உயர்ந்து 61,192-ஆக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT