வர்த்தகம்

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.4,110 கோடி

DIN


நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் இரண்டாவது காலாண்டில் ரூ.4,110 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.3,726 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10.3 சதவீத வளர்ச்சியாகும். வருவாய் ரூ.17,597 கோடியிலிருந்து 17.3 சதவீதம் அதிகரித்து ரூ.20,609 கோடியானது என மும்பை பங்குச் சந்தையிடம் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
இரண்டாவது காலாண்டில் அனைத்து பிரிவிலான வர்த்தகமும் சிறப்பான அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் காரணமாக, அந்த காலாண்டில் மட்டும் 200 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தை பெற்றுள்ளோம். உலக அளவில் உள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரத்தில் சேவை அளிப்பதே முதல் இலக்கு.
செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் டிஜிட்டல் சேவைகள் மூலமாக கிடைத்த வருவாய் 90.5 கோடி டாலரை எட்டியுள்ளது. மொத்த வருவாயில் இது 31 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது. முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.7 இடைக்கால டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சலீல் பரேக் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT