வர்த்தகம்

டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் ரூ.211 கோடி

DIN


டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ.211.3 கோடியாக குறைந்துள்ளது என அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.213.2 கோடியுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும். 
அதேசமயம் மொத்த வருவாய் ரூ.4,098 கோடியிலிருந்து 21.9 சதவீதம் அதிகரித்து ரூ.4,994 கோடியாக இருந்தது.
ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனை (ஏற்றுமதி உள்பட) 13.6 சதவீதம் அதிகரித்து 10.49 லட்சமாக இருந்தது.
வரும் 2019 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிதி ஆண்டுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.2.10 வழங்க (210 சதவீதம்) நிறுவனத்தின் இயக்குநர் குழு முடிவு செய்துள்ளதாக டிவிஎஸ் மோட்டார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT