வர்த்தகம்

நேரடி வரி வசூல் ரூ.11.5 லட்சம் கோடியைத் தாண்டும்'

DIN


நாட்டின் நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டில் ரூ.11.5 லட்சம் கோடியைத் தாண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா  திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2017-18 நிதியாண்டில் நேரடி வரி வசூல் 18 சதவீதம் அதிகரித்து ரூ.10.03 லட்சம் கோடியாக காணப்பட்டது. 
இந்த நிலையில், நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நேரடி வரி வசூல் மூலம் ரூ.11.5 லட்சம் கோடியை திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. 
ஆனால் இந்த இலக்கை நாம் நிச்சயம் விஞ்சி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதுவரையில் மொத்தம் ரூ.95,000 கோடி அளவுக்கு வரி ரீஃபண்ட் தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட்-வால்மார்ட் ஒப்பந்தத்தின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.7,500 கோடியை நெருங்கி விட்டது என்றார் அவர்.
ஏப்ரல்-ஜூன் வரையிலான மூன்று மாத கால அளவில் நேரடி வரி வசூலானது வெறும் 4.2 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1.54 லட்சம் கோடியாக மட்டுமே காணப்படும் நிலையில் சந்திரா இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலுவையில் உள்ள வரி ரீஃபண்ட் தொகையை விரைவாக வழங்க ஜூன் 1-30 வரை மத்திய அரசு சிறப்பு முகாம்களை நடத்தியது. 
அதன் பயனாக, ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி ரீஃபண்ட் கோரி நிலுவையிலிருந்த 99 சதவீத விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT