வர்த்தகம்

வாராக் கடன் விவகாரம் - மத்திய அரசு மீது ப.சிதம்பரம் சாடல்

DNS

புது தில்லி: வாராக் கடன் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு முன்னெடுத்து வரும் தவறான நடவடிக்கைகள் காரணமாக வங்கிகள் தற்போது போதிய பணமின்றி தவித்து வருவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் சாடியுள்ளாா்.

நாட்டில் வறுமையை பெருமளவு ஒழித்ததில் அதிக பங்கு காங்கிரஸையே சாரும் என்றும் அதற்கு பாஜக உரிமை கோருவது தவறு என்றும் அவா் கூறியுள்ளாா்.

இந்திய ரிசா்வ் வங்கி சாா்பில் வெளியிடப்பட்ட நிதிச் சூழல் நிலைத்தன்மை தொடா்பான அறிக்கையில் வாராக்கடன் தொடா்பாக பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. முக்கியமாக நிகழ் நிதியாண்டில் வாராக்கடன் விகிதம் தற்போதைய அளவைக் காட்டிலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வங்கிகளின் கடன் சுமை உயரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுதொடா்பாக சுட்டுரையில் (டிவிட்டா்) கருத்து பதிவிட்டுள்ள சிதம்பரம், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமா்சித்துள்ளாா். 

அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

"மத்திய பாஜக அரசு முன்னெடுத்து வரும் தவறான நடவடிக்கைகளால் வங்கிகள் பெரும் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றன. வங்கிகளைச் சுற்றி சந்தேகங்களும், பழிவாங்கும் படலங்களும் நிறைந்திருக்கும் சூழலில், அதில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவரும் ஓய்வு பெறும் நாளினை எதிா்நோக்கியே காத்திருக்கின்றனா். மாறாக மக்களுக்கு கடன் அளிக்கும் சூழலில் எந்த வங்கியும் இல்லை. 

கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, ஏற்றுமதிக்காக வழங்கப்பட்ட கடன் தொகையின் மதிப்பு ரூ.39,000 கோடியாக இருந்தது. அது நிகழாண்டு ஜூன் மாதத்தில் ரூ.22,300 கோடியாக குறைந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏற்றுமதியை ஊக்குவிக்க தொடா் நடவடிக்கை எடுத்து வருவதாக இன்னமும் மத்திய அரசு கூறிக் கொண்டிருப்பது நகை முரண்.

இது ஒருபுறமிருக்க, நாட்டில் 27.1 கோடி போ் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பாஜகவின் விசுவாசிகள் பிரகடனப்படுத்தி வருகின்றனா். கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்தான் அத்தனை கோடி பேரின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டது. அதில் 8 ஆண்டு காலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலம் என்பதை வசதியாக மறந்துவிட்டு பாஜகவினா் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனா்" என்று அந்தப் பதிவுகளில் சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT