வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பில் 120 கோடி டாலர் உயர்வு

தினமணி

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 120 கோடி டாலர் அதிகரித்து 40,048 கோடி டாலராக இருந்தது.
 இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 82 கோடி டாலர் குறைந்து 39,928 கோடி டாலராக காணப்பட்டது.
 மதிப்பீட்டு வாரத்தில் ஒட்டுமொத்த இருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 105 கோடி டாலர் உயர்ந்து 37,615 கோடி டாலராக இருந்தது.
 தங்கத்தின் கையிருப்பு 14.4 கோடி டாலர் அதிகரித்து 2,037 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் மதிப்பு 28 லட்சம் டாலர் உயர்ந்து 147 கோடி டாலராகவும், நம் நாடு வைத்துள்ள கையிருப்பு அளவு 49 லட்சம் டாலர் அதிகரித்து 247 கோடி டாலராகவும் இருந்தன என்று ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 நடப்பாண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றில் முதல் முறையாக 42,602 கோடி டாலரை எட்டியிருந்தது. அதன் பிறகு கையிருப்பு அளவு சரிவடைந்தே காணப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT