வர்த்தகம்

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி உயர்வு: மத்திய அரசு உத்தரவு

DIN

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களின் மீதான சுங்க வரியை உயர்த்தி மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

சில குறிப்பிட்ட இறக்குமதி பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு, சுங்க வரி நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் நடப்பு கணக்குப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 19 பொருட்கள் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டது. 

இந்த வரி உயர்வானது புதன்கிழமை இரவு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. 2017-18 நிதியாண்டில் ரூ.86 ஆயிரம் கோடி சுங்க வரி வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அதன் விவரம் பின்வருமாறு:

ஏசி, வீட்டு உபயோக ஃபிரிட்ஜ், 10 கிலோவுக்கும் குறைவான வாஷிங் மெஷின், ஸ்பீக்கர்ஸ், காலணிகள், கார்களுக்குப் பயன்படுத்தப்படும் ரேடியல் டயர்கள், வைரம், முறைப்படுத்தப்பட்ட நவரத்தினம், நகைகளில் பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருட்கள், குளியலறை உபகரணங்கள், பிளாஸ்டிக்கால் ஆன பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள், சமயலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் ஃபர்னீச்சர்கள், அலங்காரப் பொருட்கள், மெத்தை, சூட்கேஸ், டிராவல் பேக்ஸ், விமானங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய எரிபொருள் உள்ளிட்டவை அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT