வர்த்தகம்

அலுமினியம் பூசப்பட்ட பொருள்கள் இறக்குமதி மூலம் குவிப்பு: வர்த்தக அமைச்சகம் விசாரணை

DIN

அலுமினியம் பூசப்பட்ட பொருள்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து அது குறித்த விசாரணையை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
 சீனா, கொரியா மற்றும் வியத்நாம் நாடுகளிலிருந்து அலுமினியம் மற்றும் துத்தநாகம் பூசப்பட்ட பொருள்களின் இறக்குமதி அதிகரித்துள்ளதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இதையடுத்து, புகாரின் உண்மை நிலவரம் குறித்து அறிவதற்காக வர்த்தக அமைச்சகத்தின் வர்த்தக தீர்வு பொது இயக்குநரகம் (டிஜிடிஆர்) விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணையில் இறக்குமதி மூலம் அப்பொருள்கள் அதிக அளவு குவிக்கப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்குமானால் அவற்றின் மீதான இறக்குமதிக்கு பொருள் குவிப்பு வரி விதிக்கப்படும் என டிஜிடிஆர் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அலுமினியம் மற்றும் துத்தநாகம் பூசப்பட்ட பொருள்கள் அரிப்பை தடுக்கும் என்பதால், அவை சூரிய மின் உற்பத்தி திட்டங்கள், கூரைகள், உபகரணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT