வர்த்தகம்

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.8,126 கோடி

DIN


நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.8,126 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.6,904 கோடியுடன் ஒப்பிடும்போது இது 17.7 சதவீதம் அதிகம்.
வருவாய் ரூ.32,075 கோடியிலிருந்து 18.5 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.38,010 கோடியானது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19-ஆம் முழு நிதியாண்டில், நிகர லாபம் 21.9 சதவீதம் அதிகரித்து ரூ.31,472 கோடியாகவும், வருவாய் 19 சதவீதம் உயர்ந்து ரூ.1,46,463 கோடியாகவும் இருந்தது.
முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.18 இறுதி ஈவுத்தொகையாக வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது என டிசிஎஸ் நிறுவனம், செபி-யிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நிதி நிலை முடிவு குறித்து டிசிஎஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் கூறியதாவது:
கடந்த 15 காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வலுவான நிலையை எட்டியது. அதேபோன்று நிறுவனத்தின் வர்த்தக ஒப்பந்தங்களின் மதிப்பும் முந்தை மூன்று காலாண்டுகளில் காணப்படாத அளவில் உயர்ந்துள்ளது. அடிப்படை பொருளாதார காரணிகளில் நிச்சயமற்ற தன்மை நிலவிய போதிலும், நிறுவனம் சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்துள்ளது புதிய நிதியாண்டின் வெற்றிப் பயணத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT