வர்த்தகம்

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் காலாண்டு நிகர லாபம் 39% உயர்வு

DIN

கடந்த நிதியாண்டில் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடைசி காலாண்டு விற்பனை 39 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனம் நிர்வகிக்கும் முதலீடுகளின் மதிப்பு ரூ.29,582 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும், 3-வது காலாண்டோடு ஒப்பிடுகையில், ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரையிலான 4-ஆவது காலாண்டில் கடன் பட்டுவாடாவின் மதிப்பு 44 சதவீதம் அதிகரித்துள்ளது.
முந்தைய நிதியாண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், கடந்த நிதியாண்டின் கடைசி 3 மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் 39 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT