வர்த்தகம்

சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் லாபம் ரூ.330 கோடி

DIN


முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.330.02 கோடியை ஈட்டியுள்ளது.
இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.314.04 கோடியுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,475.60 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,122.67 கோடியானது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.10,946.81 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,414.83 கோடியாகவும் இருந்தது  என சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT