வர்த்தகம்

ஆன்லைன் வணிகம்: பொருள்கள் விநியோக பகுதிகளை அதிகரித்தது ஸ்னாப்டீல்!

DIN


பொதுவாக 90 சதவீத ஆர்டர்கள் மெட்ரோ நகரங்களைத் தவிர்த்து பிற பகுதிகளாகவே இருப்பதால், தங்களது டெலிவரி வட்டத்தை விரிவாக்கியிருக்கிறது ஸ்னாப்டீல்.

தற்போதிருக்கும் டெலிவரி பகுதிகளோடு, மேலும் சுமார் 3,500 அஞ்சல் குறியீட்டு (பின்கோடு) எண்களையும் சேர்த்துள்ளது. இதுபெரும்பாலும், ஊரக மற்றும் கிராமப்புற பகுதிகளாக இருப்பதாகவும் ஸ்னாப்டீல் கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் சிறிய நகரப் பகுதிகளை இணைப்பதன் மூலம் தனது வணிகத்தை ஸ்னாப்டீல் விரிவாக்கியுள்ளது.

தற்போது 28 மாவட்டங்கள், 9 யூனியன் பிரதேசங்களில் சுமார் 26 ஆயிரம் பின்கோடுகளில் டெலிவரி செய்து வரும் ஸ்னாப்டீல், இதோடு 3,500 பின்கோடுகளை புதிதாக இணைத்துள்ளது.

இதுவரை ஸ்னாப்டீல் வழியாக பொருட்களை வாங்க முடியாமல் இருந்தவர்கள் கூட இனி அந்த வசதியைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT