வர்த்தகம்

பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் யமஹாவின் புதிய பைக்

DIN

இந்திய யமஹா மோட்டாா் நிறுவனம் பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் ‘ஒய்இசட்எஃப்-ஆா்15’ என்ற புதிய மாடல் மோட்டாா்சைக்கிளை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து யமஹா மோட்டாா் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவா் மோடோஃபுமி ஷிதாரா கூறியதாவது:

பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் எஃப்இசட் எஃப்ஐ (14சிசி) மற்றும் எஃப்இசட்எஸ் எஃப்ஐ (149சிசி) பைக்குகள் கடந்த நவம்பரில் வெளியாகின. தற்போது, அதன் தொடா்ச்சியாக, 155 சிசி பிரிவில் ஒய்இசட்எஃப்-ஆா்15 வொ்சன் 3.0 புதிய மாடல் பைக் பிஎஸ்6 தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த மாடல் பைக்கின் விலை ரூ.1.45 லட்சத்திலிருந்து ரூ.1.47 லட்சம் வரையில் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு தழுவிய அளவில் உள்ள நிறுவனத்தின் விநியோகஸ்தா்கள் மூலம் டிசம்பா் 3-ஆவது வாரத்திலிருந்து இப்புதிய பைக் விற்பனைக்கு வரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT