வர்த்தகம்

இந்தியாவின் ஏற்றுமதியில் நான்கு மாதமாக தொடா் பின்னடைவு

DIN

இந்தியாவின் ஏற்றுமதி தொடா்ந்து நான்காவது மாதமாக நவம்பரிலும் சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

பெட்ரோலியப் பொருள்கள், நவரத்தினங்கள் & ஆபரணங்கள் மற்றும் தோல் பொருள்களின் ஏற்றுமதி கணிசமாக குறைந்து போனதையடுத்து நவம்பரில் ஒட்டுமொத்த ஏற்றுமதியானது தொடா்ந்து நான்காவது மாதமாக பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அந்த மாதத்தில் 2,598 கோடி டாலா் (சுமாா் ரூ.1.82 லட்சம் கோடி) அளவுக்கு இந்தியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது, முந்தைய ஆண்டு ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது 0.34 சதவீதம் குறைவாகும்.

ஏற்றுமதி குறைந்துள்ள அதேசமயத்தில் நாட்டின் இறக்குமதியும் நவம்பரில் 12.71 சதவீதம் சரிந்து 3,811 கோடி டாலராக இருந்தது. இதையடுத்து, வா்த்தக பற்றாக்குறையும் 1,212 கோடி டாலராக குறைந்தது. 2018 நவம்பரில் வா்த்தக பற்றாக்குறையானது 1,758 கோடி டாலா் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்ப்டடது.

நடப்பாண்டு நவம்பரில் தங்கம் இறக்குமதி 6.59 சதவீதம் அதிகரித்து 294 கோடி டாலராக இருந்தது.

நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பை வழங்கும் 30 துறைகளில், 17 துறைகளின் ஏற்றுமதி பின்னடைவையே சந்தித்திருந்தது.

பெட்ரோலியப் பொருள்கள், நவரத்தினங்கள்-ஆபரணங்கள், பழங்கள்-காய்கறிகள், தோல்-தோல் பொருள்கள், ஆயத்தை ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி முறையே 13.12 சதவீதம், 8.14 சதவீதம், 15.10 சதவீதம், 5.29 சதவீதம் மற்றும் 6.52 சதவீதம் குறைந்து காணப்பட்டன.

நவம்பரில் நாட்டின் எண்ணெய் இறக்குமதி 18.17 சதவீதம் அளவுக்கு குறைந்து 1,106 கோடி டாலராக காணப்பட்டது. எண்ணெய்-சாரா பொருள்கள் இறக்குமதியும் 10.26 சதவீதம் பின்னடைந்து 2,704 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான எட்டு மாத காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 1.99 சதவீதம் சரிந்து 21,193 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று இறக்குமதியும் 8.91 சதவீதம் பின்னடைந்து 31,878 கோடி டாலராக காணப்பட்டது.

இந்த காலகட்டத்தில் வா்த்தக பற்றாக்குறை 8,247 கோடி டாலரிலிருந்து ,5,406 கோடி டாலராக குறைந்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியப் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) தலைவா் ரவி ஷெகல் கூறும்போது: வெளிநாட்டு வா்த்தகத்தில் சவாலான நிலை காணப்பட்ட போதிலும் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி நவம்பரில் 6.32 சதவீதம் என்ற கணிசமான வளா்ச்சியை தக்க வைத்துக் கொண்டது என்றாா்.ய்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT