வர்த்தகம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.55 கோடி

DIN

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் டிசம்பர் காலாண்டில் ரூ.55.6 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.805.2 கோடி மதிப்பிலான கடன்களுக்கு அனுமதி வழங்கியது. வழங்கப்பட்ட கடன் 12 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.733.2 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் 8 சதவீதம் உயர்ந்து ரூ.115.2 கோடியாகவும், நிகர லாபம் 31 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.55.6 கோடியாகவும் இருந்தது.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 9 மாத கால அளவில் அனுமதி அளிக்கப்பட்ட கடன் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2,397.2 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன் 13 சதவீதம் உயர்ந்து ரூ.2,213.7 கோடியாகவும் இருந்தது. நிகர வட்டி வருவாய் 4 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.341 கோடியாகவும்,  நிகர லாபம் 9 சதவீதம் அதிகரித்து ரூ.183.1 கோடியாகவும் இருந்தது. 
கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் நடவடிக்கைகள் 12.4 சதவீதம் அதிகரித்து ரூ.10,668 கோடியை எட்டியது. இதில், தனிநபர் கடன் 13. 2 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.  சுய வேலைவாய்ப்பு கடன் 55.1 சதவீத பங்களிப்பையும், சொத்து அடமான கடன் 18.4 சதவீத பங்களிப்பையும் வழங்கி வருவதாக ரெப்கோ ஹோம் பைனான்ஸ் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT