வர்த்தகம்

உருக்கு உற்பத்தி 89.36 லட்சம் டன்னாக குறைவு

DIN


இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற டிசம்பர் மாதத்தில் 89.36 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இதுகுறித்து உருக்குத் துறை அமைச்சகத்தின் ஜேபிசி அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017 டிசம்பரில் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி 90.67 லட்சம் டன்னாக இருந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு நவம்பரில் இந்த உற்பத்தி 1.4 சதவீதம் குறைந்து 89.63 லட்சம் டன்னாக காணப்பட்டது. 
2018 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது டிசம்பரில் உருக்கு உற்பத்தியானது 0.3 சதவீதம் அளவுக்கு மட்டுமே குறைந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 30 கோடி டன் உருக்கு உற்பத்தியை எட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT