வர்த்தகம்

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் லாபம் ரூ.303 கோடி

DIN

பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் மூன்றாம் காலாண்டில் ரூ.303 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் ரூ.2,078.46 கோடி மொத்த வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.1,416.21 கோடியாக காணப்பட்டது. மொத்த நிகர லாபம் ரூ.229.5 கோடியிலிருந்து 32 சதவீதம் அதிகரித்து ரூ.303 கோடியாகியுள்ளது. நிகர வட்டி லாப வரம்பு 3.02 சதவீதத்திலிருந்து 3.06 சதவீதத்தை எட்டியது. 
சொத்து மதிப்பில் மொத்த வாராக் கடன் விகிதம் 0.47 சதவீதத்திலிருந்து அதிகரித்து 0.47  சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.31 சதவீதத்திலிருந்து உயர்ந்து 0.37 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி வங்கியின் மொத்த கடன் ரூ.50,751 கோடியிலிருந்து 36 சதவீதம் அதிகரித்து ரூ.69,165.6 கோடியை எட்டியுள்ளது என பிஎன்பி ஹவுசிங் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT