வர்த்தகம்

"எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்தில் மிக குறைந்த அளவு தாக்கத்தையே ஏற்படுத்தும்'

DIN

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டின் பணவீக்கத்தில் குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என நிதி செயலர் சுபாஷ் சந்திர கர்க் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு, நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் எரிபொருள்கள் மீது வரி விதிப்பை அமல்படுத்தியது. அதன் காரணமாக, மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.40-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.36-ம் உயர்ந்துள்ளது.
 பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு பணவீக்கத்தில் மிக குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும். பணவீக்கமானது ஏற்கெனவே 4 சதவீதம் என்ற குறைவான அளவில் கட்டுக்குள் தான் உள்ளது. எனவே, இதுகுறித்து நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.
 நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.90,000 கோடி அளவுக்கு ஈவுத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT