வர்த்தகம்

வேலூர்: கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்

DIN

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலையொட்டி கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக வி.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் சனிக்கிழமை பிறப்பித்தார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,  நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குநராக இருந்த வி.ராஜாராமன் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 22 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக ராஜாராமன் பணியாற்றினார். தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து அவர் அரசுத்துறை பொறுப்புக்கு (நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குநர்) நியமிக்கப்பட்டிருந்தார். 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக அவரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுடன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT