வர்த்தகம்

ஹெச்டிஎஃப்சி வங்கி லாபம் 18% அதிகரிப்பு

DIN

தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கியின் முதல் காலாண்டு லாபம் 18.04 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அந்த நிறுவனம் செபியிடம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த வருவாய் ரூ.34,324.45 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.28,000.06 கோடியாக காணப்பட்டது. ஒட்டுமொத்த லாபம் ரூ.4,808.35 கோடியிலிருந்து 18.04 சதவீதம் அதிகரித்து ரூ.5,676.06 கோடியைத் தொட்டது.

மதிப்பீட்டு காலாண்டில் வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் ரூ.9,538.62 கோடியிலிருந்து (1.33 சதவீதம்) அதிகரித்து ரூ.11,768.95 கோடியாகி (1.40 சதவீதம்) உள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 0.41 சதவீதத்திலிருந்து உயர்ந்து 0.43 சதவீதமாகியுள்ளது.

எதிர்பாராத செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை ரூ.1,629.37 கோடியிலிருந்து மிகவும் அதிகரித்து ரூ.2,613.06 கோடியாக இருந்தது என்று செபியிடம் ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT