வர்த்தகம்

தென்கொரிய பல்கலை.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

DIN

சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் கிரசென்ட் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும்,தென்கொரியா குயிங்டாங் சர்வதேச பல்கலையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையே மாணவர்கள், ஆசிரியர்கள் பரிமாற்றம், பொறியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மேலாண்மைக் கல்வி ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த கலந்தாய்வுக்குப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் நடைபெற்றது. ஒப்பந்தத்தில் கிரசென்ட் உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சார்பில் பதிவாளர் ஏ.ஆஸாத்தும்,  குயிங்டாங் பல்கலைக்கழகத் தலைவரும்,துணை வேந்தருமான ஜான் லீயும் கையெழுத்திட்டனர். அப்போது வெளிநாட்டு விவகாரத்துறை இயக்குநர் ராஜா பிரபு, இணைப் பதிவாளர் ராஜா ஹூசேன், கொரிய பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை மையம் நிர்வாக இயக்குநர் ஜூலியா ஜங், 
மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் நிக்கத் எம்.ஹம்சா. உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT