வர்த்தகம்

மீண்டும் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது தங்கம்

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களுக்கு பிறகு மீண்டும் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியது. ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி,  ஒரு பவுனுக்கு ரூ.312 உயர்ந்து, ரூ.25,288-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில்,  கடந்த 8-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியது. 
அன்றைய தினத்தில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,142 ஆகவும், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.25,136 ஆகவும் இருந்தது. அதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்து வந்தது. 

கடந்த 4 நாள்களாக தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஆபர

த்தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.312 உயர்ந்து, ரூ.25,288-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.3,161-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு50 பைசா உயர்ந்து, ரூ.40.40 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து, ரூ.40,400 
ஆகவும் இருந்தது.


வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,161
1 பவுன் தங்கம்    25,288
1 கிராம் வெள்ளி    40.40
1 கிலோ வெள்ளி    40,400


வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,122
1 பவுன் தங்கம்    24,976
1 கிராம் வெள்ளி    39.90
1 கிலோ வெள்ளி    39,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT