வர்த்தகம்

நாட்டின் தேயிலை ஏற்றுமதியில் சரிவு நிலை

DIN


நாட்டின் தேயிலை ஏற்றுமதி நடப்பாண்டு ஜனவரியில் சரிவைக் கண்டுள்ளது.
இதுகுறித்து தேயிலை வாரியத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 2.38 கோடி கிலோவாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு ஜனவரியில் இதன் ஏற்றுமதியானது 2.22 கோடி கிலோவாக சரிந்துள்ளது. அளவின் அடிப்படையில் தேயிலை ஏற்றுமதி குறைந்துள்ள போதிலும், மதிப்பின் அடிப்படையில் இதன் ரூ.470.83 கோடியிலிருந்து ரூ.480.77 கோடியாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதற்கு, கடந்தாண்டு ஜனவரியில் ரூ.197.42-ஆக காணப்பட்ட ஒரு கிலோ தேயிலையின் விலை நடப்பாண்டு ஜனவரியில் ரூ.215.88-ஆக அதிகரித்ததே முக்கிய காரணம். மதிப்பீட்டு மாதத்தில், காமன்வெல்த் நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி 60.6 லட்சம் கிலோவிலிருந்து சரிந்து 49.6 லட்சம் கிலோவானது. அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கான இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 31.9 லட்சம் கிலோவிலிருந்து 15.10 லட்சம் கிலோவாக கணிசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மேற்கண்ட நாடுகளில் ஏற்றுமதி குறைந்துள்ள போதிலும், ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி 28.2 லட்சம் கிலோவிலிருந்து 59 லட்சம் கிலோவாக வெகுவாக அதிகரித்துள்ளது. 
அதேபோன்று பாகிஸ்தானுக்கான தேயிலை ஏற்றுமதியும் நடப்பாண்டு ஜனவரியில் 13.10 லட்சம் கிலோவாக ஏற்றம் கண்டுள்ளது. 2018 ஜனவரியில் இதன் ஏற்றுமதி 11.40 லட்சம் கிலோவாக மட்டுமே காணப்பட்டதாக தேயிலை வாரியத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT