வர்த்தகம்

ரூ.2,337 கோடி வாராக் கடன் ஏலம்: எஸ்பிஐ

DIN


பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)  ரூ.2,337.88 கோடி மதிப்பிலான ஆறு வாராக் கடன்களை ஏலத்தில் விடவுள்ளது. இந்த ஏலம் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என எஸ்பிஐ வலைத்தளத்தில் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
எஸ்பிஐ,  இந்த கணக்குகளை 100 சதவீத ரொக்க அடிப்படையில், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு  நிறுவனங்கள் மற்றும் இதர நிதி நிறுவனங்களிடம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. 
 இந்தியன் ஸ்டீல் கார்ப்பரேஷன் (  கடன் நிலுவை ரூ.928.88 கோடி), ஜெய் பாலஜி இண்டஸ்ட்ரீஸ் (ரூ.859.33 கோடி), கோஹினூர் பிளானட் கன்ஸ்ட்ரக்ஷன் (ரூ.207.77 கோடி), மிட்டல் குரூப் (ரூ.116.34 கோடி), எம்சிஎல் குளோபல் ஸ்டீல் (ரூ.100.18 கோடி), ஸ்ரீ வைஷ்ணவ் இஸ்பத் (ரூ.82.52 கோடி) மற்றும் கதி இன்ப்ராஸ்ட்ரக்ஸர் (ரூ.42.86 கோடி) ஆகிய நிறுவனங்களின் வாராக் கடன்கள் ஏலம் விடப்பட உள்ளன.
அதேபோன்று மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில், பேரன்டல் டிரக்ஸ் (ரூ.429.72 கோடி), காமாட்சி இண்டஸ்ட்ரீஸ் (ரூ.368.68 கோடி), ஜெயின் இன்ஃப்ராபுராஜக்ட்ஸ் (ரூ.361.55 கோடி) உள்ளிட்ட 6 நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள ரூ.1,307.27 கோடி மதிப்பிலான வாராக் கடன்கள் இடம்பெறவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT