வர்த்தகம்

எம்ஆர்எஃப் லாபம் ரூ.293 கோடியாக சரிவு

DIN


டயர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எம்ஆர்எஃப் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.293.83 கோடியாக குறைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2018-19 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் எம்ஆர்எஃப் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.4,073.45 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.3,835.50 கோடியாக காணப்பட்டது. அதேசமயம், நிகர லாபம் ரூ.345.32 கோடியிலிருந்து குறைந்து ரூ.293.93 கோடியாகி உள்ளது.
கடந்த 2018-19 முழு நிதியாண்டில் வருவாய் ரூ.15,181.05 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.15,837 கோடியாகி உள்ளது. நிகர லாபம் ரூ.1,092.28 கோடியிலிருந்து சற்று அதிகரித்து ரூ.1,096.87 கோடியைத் தொட்டுள்ளது. கடந்த நிதியாண்டுக்கு இறுதி ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.54 வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக எம்ஆர்எஃப் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT