வர்த்தகம்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் இழப்பு ரூ.270 கோடி

DIN


 நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.270.52 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் இந்நிறுவனம் ரூ.335.96 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. மதிப்பீட்டு காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,060.47 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,570.11 கோடியானது. 
2018-19 முழு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.604.77 கோடியாகவும், வருவாய் ரூ.25,406.19 கோடியாகவும் இருந்தது.
கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1.50 ஈவுத்தொகை வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளதாக செபி-யிடம் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT