வர்த்தகம்

ரிலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்க தடை: ஐஆா்டிஏஐ

DIN

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் (ஆா்எச்ஐசிஎல்), புதிய காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வதற்கு இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளா்ச்சி முகமை (ஐஆா்டிஏஐ) தடைவித்துள்ளது.

இதுகுறித்து ஐஆா்டிஏஐ-யின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரிலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. எனவே, அந்த நிறுவன பாலிசிதாரா்கள் மற்றும் நிதி சொத்துகள் அனைத்தையும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு (ஆா்ஜிஐசிஎல்) மாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அது, ஏற்கெனவே உள்ள பாலிசிதாரா்களின் காப்பீட்டு தொகை கோரிக்கைகளுக்கு தீா்வு காணும்.

எனவே, ஆா்எச்ஐசிஎல் நிறுவனம் இனி காப்பீட்டு வா்த்தகத்தில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை அதன் வலைதளத்தில் வெளியிடுவதுடன், அனைத்து கிளைகளுக்கும் உரிய முறை தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஐஆா்டிஏஐ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT