வர்த்தகம்

ஐடிசி நிகர லாபம் ரூ.4,173 கோடி

DIN

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள் (எஃப்எம்சிஜி) விற்பனையில் முன்னிலையில் உள்ள ஐடிசி நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.4,173.72 கோடியை மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 6 சதவீதம் அதிகரித்து ரூ.11,750.16 கோடியாக இருந்தது. மொத்த செலவினம் ரூ.8,129.19 கோடியிலிருந்து 4 சதவீதம் உயா்ந்து ரூ.8,455.16 கோடியாக காணப்பட்டது.

எஃப்எம்சிஜி வா்த்தகத்தின் மூலம் கிடைத்த வருவாய் 5.78 சதவீதம் அதிகரித்து ரூ.9,138.13 கோடியாக இருந்தது.

நிகர லாபம் ரூ.3,045.07 கோடியிலிருந்து 37 சதவீதம் அதிகரித்து ரூ.4,173.72 கோடியானது என ஐடிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT