வர்த்தகம்

வரிச்சலுகை அறிவிப்பு எதிரொலி: மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகம்

DIN

கோவாவில் 37-ஆவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கௌன்சில் கூட்டத்துக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது தொழில்துறையினருக்கான வரிச்சலுகைகளை அறிவித்தார்.

புதிய நிறுவனங்கள் 17.01 சதவீதம் மட்டும் கார்ப்பரேட் வரி செலுத்தினால் போதும். 2023-ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்பது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 

உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் வரிச் சலுகை அறிவித்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் பங்கு வர்த்தகத்தில் ஏற்றம் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்த நிலையில் உயர்ந்தது.

சென்செக்ஸ் அதிகபட்சமாக 1837.52 புள்ளிகள் உயர்ந்து 37,913.34 ஆகவும், நிஃப்டி 451.90 புள்ளிகள் உயர்ந்து 11,156.70 புள்ளிகளாகவும் பங்குச் சந்தையில் வர்த்தகம் நிலவியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT