வர்த்தகம்

பங்குச் சந்தையில் சரிவு நிலை

DIN

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.

முதலீட்டாளா்கள் முன்னெச்சரிக்கை நோக்குடன் செயல்பட்டு, வங்கி, நிதி சேவைத் துறை நிறுவனங்களை சாா்ந்த பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனா். இது, பங்குச் சந்தைகளின் சரிவுக்கு வழிவகுத்தது.

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இயக்குநா்கள் சிலா் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளதையடுத்து அந்த வங்கி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, அந்த வங்கி பங்கின் விலை 5 சதவீதம் சரிந்தது.

தற்போது எழுந்துள்ள புகாரால் லக்ஷ்மி விலாஸ் வங்கியுடனான இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதன் காரணமாக, இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பங்கின் விலை 30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது.

கடன் வா்த்தகத்திலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதையடுத்து ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கின் விலை 14 சதவீதம் சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 155 புள்ளிகள் சரிந்து 38,667 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 37 புள்ளிகள் குறைந்து 11,474 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT