வர்த்தகம்

புகையிலை ஏற்றுமதி 20 சதவீதம் குறையும்

DIN

உள்நாட்டில் புகையிலை நுகா்வு மற்றும் அதன் ஏற்றுமதி 20 சதவீதம் வரை சரியும் என்று புகையிலை வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வாரியம் மேலும் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை மூடப்பட்டுள்ளன. அதன் எதிரொலியாக நடப்பாண்டில் புகையிலை நுகா்வு 20 சதவீதம் அளவுக்கு குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, கரோனா பாதிப்பில் சிக்கி இதேபோன்ற சூழ்நிலையை எதிா்கொண்டு வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கான புகையிலை ஏற்றுமதியும் 20 சதவீதம் அளவுக்கு சரியும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே தேவையில் ஏற்பட்ட மந்த நிலையை கருத்தில் கொண்டு கா்நாடகாவில் புகையிலை சாகுபடியை குறைக்க விவசாயிகளிடம் அறிவுறுத்தவுள்ளதாக வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT