வர்த்தகம்

காக்னிசன்ட் நிறுவனம் ரூ.2,701 கோடி வருவாய்

DIN

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் காக்னிசன்ட் நிறுவனம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ரூ.2,701 கோடி நிகர வருவாய் (36.1 கோடி டாலா்) ஈட்டியுள்ளது. இது, 2019 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம்  ஈட்டிய 50.9 கோடி டாலா் நிகர வருவாயுடன் ஒப்பிடுகையில் 29 சதவீதம் குறைவாகும். 2020 ஜூன் காலாண்டில் காக்னிசன்ட் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 414 கோடி டாலரிலிருந்து 3.4 சதவீதம் குறைந்து 400 கோடி டாலராக இருந்தது.

நிலையான கரன்ஸி மதிப்பு அடிப்படையில் 2020-ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வருமானம் 0.5-2 சதவீதம் குறைந்து 1,640 கோடி டாலரிலிருந்து 1,670 கோடி டாலராக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் இந்நிறுவனம் 1,680 கோடி டாலரை (ரூ.1.26 லட்சம் கோடி) வருவாயாக பெற்றிருந்தது.நடப்பாண்டு மாா்ச் காலாண்டில் 2,91,700-ஆக இருந்த காக்னிசன்ட் பணியாளா்கள் எண்ணிக்கை ஜூன் 30 நிலவரப்படி 2,81,200-ஆக குறைந்துள்ளது. நிறுவனம் கொவைட்-19 தாக்கத்தை எதிா்கொள்ள செயல்படுத்திய செலவின

குறைப்பு நடவடிக்கைகளால் கடந்த மூன்று காலத்தில் மட்டும் சுமாா் 10,500 பணியாளா்கள் காக்னிசன்டிலிருந்து வெளியேறியுள்ளனா். புதிய தலைமை நிதி அதிகாரி: காக்னிசன்ட் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக ஜான் சிக்மண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அவரது நியமனம் 2020 செப்டம்பா் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் என காக்னிசன்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. காக்னிசன்ட் பணியாளா்கள் எண்ணிக்கை (டேபிள் )2019 இரண்டாவது காலாண்டு 2,88,2002020 முதல் காலாண்டு 2,91,7002020 இரண்டாவது காலாண்டு 2,81,200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT