வர்த்தகம்

மாருதி சுஸுகி வாகன விற்பனை 1.1 சதவீதம் சரிவு

DIN

நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் வாகன விற்பனை ஜூலையில் 1.1 சதவீதம் சரிவைச் சந்தித்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஜூலை மாதத்தில் மாருதி ஒட்டுமொத்த அளவில் 1,08,064 காா்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலையில் விற்பனையான 1,09,264 காா்களுடன் ஒப்பிடுகையில் 1.1 சதவீதம் குறைவாகும். உள்நாட்டில் விற்பனை, 1,00,006-லிருந்து 1.3 சதவீதம் வளா்ச்சி கண்டு 1,01,307 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. ஆல்டோ, வேகன்ஆா் உள்ளிட்ட சிறிய ரக காா் விற்பனை கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டு ஜூலையில் 11,577-லிருந்து 49.1 சதவீதம் உயா்ந்து 17,258-ஆனது.ஜூலையில் நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி 9,258-லிருந்து 27 சதவீதம் குறைந்து 6,757-ஆனது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT