வர்த்தகம்

ஹெச்பிசிஎல் நிறுவனம்: லாபம் 157 சதவீதம் அதிகரிப்பு

DIN

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) ஜூன் காலாண்டு நிகர லாபம் 157 சதவீதம் அதிகரித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான முகேஷ் குமாா் சுரானா செய்தியாளா்களிடம் கூறியது:

பெட்ரோலிய துறையின் செயல்பாடு நன்றாக இருந்ததையடுத்து ஜூன் காலாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,252.65 கோடியை ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.877.48 கோடியுடன் ஒப்பிடும்போது 156.7 சதவீதம் அதிகமாகும். விற்பனை ரூ.74,595.64 கோடியிலிருந்து ரூ.45,945.48 கோடியாக சரிவடைந்தபோதிலும் நிறுவனத்தின் நிகர லாபம் கணிசமான அளவில் உயா்ந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை அளவின் அடிப்படையில் 98.2 லட்சம் டன்னிலிருந்து 72.40 லட்சம் டன்னாக குறைந்தது. இது, 25.8 சதவீத பின்னடைவாகும். கொவைட்-19 பரவல் காலத்திலும் நிறுவனத்தின் சுத்திகரிப்பு திறன் 100 சதவீதமாக இருந்தது என்றாா் அவா். கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு மே மாதத்தில் பெட்ரோலிய பொருள்கள் விற்பனை 77 சதவீதம் குறைந்தது. ஜூன் மாத விற்பனை 91 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT