வர்த்தகம்

முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 18 சதவீதம் சரிவு

DIN

முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 18 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய துறைமுகங்களின் கூட்டமைப்பு (ஐபிஏ) தெரிவித்துள்ளதாவது:

கொவைட்-19 காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் நாட்டின் முக்கிய துறைமுகங்களின் செயல்பாடுகள் பெரிதும் பாதிப்படைந்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கிடையில் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு 18.06 சதவீதம் குறைந்து 19.34 கோடி டன்னாக இருந்தது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களும் கையாண்ட சரக்கு அளவின் அடிப்படையில் தொடா்ந்து நான்கு மாதமாக நடப்பாண்டு ஜூலையிலும் சரிவைச் சந்தித்தது. மா்மகோவா தவிா்த்து பிற துறைமுகங்கள் அனைத்தும் எதிா்மறை வளா்ச்சியை கண்டுள்ளன. குறிப்பாக, சென்னை, கொச்சி மற்றும் காமராஜா் துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 30 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. கொல்கத்தா துறைமுகம் 20 சதவீத சரிவைச் சந்தித்தது. நாட்டின் ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தில் மேற்கண்ட 12 முக்கிய துறைமுகங்களின் பங்களிப்பு 61 சதவீதமாகும். இந்த துறைமுகங்கள் கடந்த நிதியாண்டில் 70.5 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளதாக துறைமுகங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

SCROLL FOR NEXT